tamilnadu

img

விநாயகர் சதுர்த்தி விழாவில் தலித் பெண் எம்எல்ஏ அவமதிப்பு

அனந்தவரம்:
ஆந்திராவில், விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட, தலித் பெண் எம்எல்ஏ ஒருவர், சாதி ரீதியாக அவமதிப்புக்கு உள் ளாக்கப்பட்டுள்ளார்.ஆந்திர மாநிலம் தடிகொண்டா தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் உண்டவள்ளி ஸ்ரீதேவி. டாக்டரான இவர், ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த எம்எல்ஏ ஆவார்.இவர், சில நாட்களுக்கு முன்பு, குண்டூர் மாவட்டம் துள்ளூர் பகுதியில் உள்ளஅனந்தவரம் எனும் ஊரில்விநாயகர் சதுர்த்தி விழாவில்கலந்து கொண்டுள்ளார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையையும் அவர் வணங்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த கொம்மினேனி சிவையா என்பவர், ஸ்ரீதேவி எம்எல்ஏ-வை கடுமையாகத் திட்டியுள்ளார். ஸ்ரீதேவியை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கூறியுள்ளார். “இந்த கீழ்ச்சாதி பெண்ணைஏன், இங்கு அனுமதித்தீர்கள், இவரால் விநாயகர் சதுர்த்தி விழாவின் புனிதம் கெட்டுவிட்டது” என்று ஓலமிட்டுள்ளார். சிவையாவின் உறவினர்களும் ஸ்ரீதேவி எம்எல்ஏ-வை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.கொம்மினேனி சிவையா,உயர்சாதியான சவுத்ரி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலையில், தற்போது சிவையா, அவரது உறவினர்கள் சாய், ராமகிருஷ்ணா மற்றும் புஜ்ஜி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;